Kural 320
குறள் 320
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்
noyaellaam noiseithaar maelavaam noiseiyaar
noyinmai vaendu pavar
Shuddhananda Bharati
No harm is done by peace-lovers
For pains rebound on pain-givers.
GU Pope
O'er every evil-doer evil broodeth still;
He evil shuns who freedom seeks from ill.
Sorrow will come upon those who cause pain to others; therfore those, who desire to be free from sorrow, give no pain to others.
Mu. Varadarajan
துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையே சார்வன. ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர், பிறர்க்குத் துன்பம் செய்யார்.
Parimelalagar
நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம் - இன்னா தன எல்லாம் பிறிதோர் உயிர்க்கு இன்னாதன செய்தார் மேல் ஆம்; நோய் இன்மை வேண்டுபவர் நோய் செய்யார் - அதனால் தம் உயிர்க்கு இன்னாதன வேண்டாதார், பிறிதோர் உயிர்க்கு இன்னாதன செய்யார்.
விளக்கம்:
("உயிர்நிலத்து வினைவித்து இட்டார்க்கு விளைவும் அதுவே,' '(சீவக. முத்தி. 164) ஆகலின், "நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம்" என்றார். இது சொற்பொருள் பின்வருநிலை. இவை இரண்டு பாட்டானும் அது செய்தார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.)
Manakkudavar
(இதன் பொருள்) இக் காலத்து நுகர்கின்ற துன்பமெல்லாம் முற்காலத்துப் பிறர்க் குத் துன்பம் செய்தார் மாட்டே யுளவாம் ; ஆதலால், இக் காலத்துப் பிறர்க்குத் துன்பத்தைச் செய்யார் வருங்காலத்துத் தமக்குத் துன்பம் வாராமையைவேண்டு பவர்,
(என்றவாறு).