Kural 32
குறள் 32
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு
araththinooungku aakkamum illai athanai
maraththalin oongkillai kaedu
Shuddhananda Bharati
Virtue enhances joy and gain;
Forsaking it is fall and pain.
GU Pope
Assertion of the Strength of Virtue
No greater gain than virtue aught can cause;
No greater loss than life oblivious of her laws.
There can be no greater source of good than (the practice of) virtue; there can be no greater source of evil than the forgetfulness of it.
Mu. Varadarajan
ஒருவருடைய வாழ்க்கைக்கு அறத்தைவிட நன்மையானதும் இல்லை; அறத்தைப் போற்றாமல் மறப்பதைவிடக் கெடுதியானதும் இல்லை.
Parimelalagar
அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை-ஒருவனுக்கு அறஞ்செய்தலின் மேற்பட்ட ஆக்கமும் இல்லை;அதனை மறத்தலின் ஊங்கு கேடு இல்லை-அதனை மயக்கத்தான் மறத்தலின் மேற்பட்ட கேடும் இல்லை.
விளக்கம்:
(அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை' என மேற்சொல்லியவதனையே அநுவதித்தார், அதனால் கேடு வருதல் கூறுதற் பயன் நோக்கி. இதனான் அது செய்யாவழிக் கேடு வருதல் கூறப்பட்டது.)
Manakkudavar
(இதன் பொருள்) ஒருவனுக்கு அறஞ் செய்தலின் மேற்பட்ட ஆக்கமுமில்லை; அதனைச் செய்யாமையின் மேற்பட்ட கேடுமில்லை,
(என்றவாறு). இஃது அறஞ் செய்யாக்காற் கேடுவருமென்று கூறிற்று.