குறள் 31

அறன்வலியுறுத்தல்

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு

sirappueenum selvamum eenum araththinooungku
aakkam yevano uyirkku


Shuddhananda Bharati

The power of virtue

From virtue weal and wealth outflow;
What greater good can mankind know?


GU Pope

Assertion of the Strength of Virtue

It yields distinction, yields prosperity; what gain
Greater than virtue can a living man obtain?

Virtue will confer heaven and wealth; what greater source of happiness can man possess ?


Mu. Varadarajan

அறம்‌, சிறப்பையும்‌ அளிக்கும்‌; செல்வத்தையும்‌ அளிக்கும்‌; ஆகையால்‌ உயிர்க்கு அத்தகைய அறத்தைவிட நன்மையானது வேறு யாது?


Parimelalagar

சிறப்பு ஈனும்-வீடுபேற்றையும் தரும்: செல்வமும் ஈனும்-துறக்கம் முதலிய செல்வத்தையும் தரும்; உயிர்க்கு அறத்தின் ஊங்கு ஆக்கம் எவன்-ஆதலான் உயிர்கட்கு அறத்தின் மிக்க ஆக்கம் யாது?
விளக்கம்:
(எல்லாப் பேற்றினும் சிறந்தமையின், வீடு 'சிறப்பு' எனப்பட்டது. ஆக்கம் தருவதனை 'ஆக்கம்' என்றார். ஆக்கம்: மேன் மேல் உயர்தல். ஈண்டு 'உயர்' என்றது மக்கள் உயிரை, சிறப்பும் செல்வமும் எய்துதற்கு உரியது அதுவே ஆகலின். இதனான் அறத்தின் மிக்க உறுதி இல்லை என்பது கூறப்பட்டது)


Manakkudavar

அறன் வலியுறுத்தலாவது அறம் வலிமையுடைத் தென்பதனை யறிவித்தல். இதனானே அறத்துப்பால் முற்றுதற்குக் காரணஞ் சொன்னாருமாம். இது மேற்கூறிய முனிவராற் கொண்டுய்க்கப்படுதலின், பிற்கூறப்பட்டது. (இதன் பொருள்) முத்தியுந்தரும் செல்வமும் தரும் ஆதலால், அறத்தின் மேல் உயிர் கட்கு ஆக்கமாவது பிறிதில்லை, (எ - று ) இது பொருளான் ஆக்கமுண்டென்பாரை மறுத்து, அறன் வலியுடைத் தென்று கூறிற்று.