Kural 318
குறள் 318
தன்னயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்
thannayirkku innaamai thaanarivaan yenkolo
mannuyirkku innaa seyal
Shuddhananda Bharati
How can he injure other souls
Who in his life injury feels.
GU Pope
Whose soul has felt the bitter smart of wrong, how can
He wrongs inflict on ever-living soul of man?
Why does a man inflict upon other creatures those sufferings, which he has found by experience are sufferings to himself ?
Mu. Varadarajan
தன் உயிர்க்குத் துன்ப மானவை இவை என்று உணர்ந்தவன், மற்ற உயிர்களுக்கு அத்துன்பங்களைச் செய்தல் என்ன காரணத்தாலோ?
Parimelalagar
தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் - பிறர் செய்யும் இன்னாதன தன்னுயிர்க்கு இன்னாவாம் தன்மையை அனுபவித்து அறிகின்றவன்; மன் உயிர்க்கு இன்னா செயல் என்கொல் - நிலைபேறுடைய பிற உயிர்கட்குத் தான் அவற்றைச் செய்தல் என்ன காரணத்தான்?
விளக்கம்:
(இவ்வாறே இவை பிற உயிர்க்கும் இன்னா என்பது அனுமானத்தான் அறிந்து வைத்துச் செய்கின்ற இப் பாவம் கழுவப்படாமையின் 'இன்னாதன யான் வருந்தப் பின்னே வந்து வருத்தும்' என்பது ஆகமத்தானும் அறிந்து ஒழியற்பாலன என்பது தோன்றத் 'தான்' என்றும், அத்தன்மையான் ஒழியாமைக்குக் காரணம் மயக்கம் என்பதுபோன்ற 'என்கொலோ' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் பொதுவகையான் விலக்கப்பட்டது.)
Manakkudavar
(இதன் பொருள்) தன்னுயிர்க்கு உற்ற இன்னாயையை உயிரில்லாப் பொருள்கள் போல் அறியாது கிடத்தலன்றித் தான் அறியுமவன், பின்னைப் பிறவுயிர்க்கு இன்னாதவற்றைச் செய்கின்றது யாதினைக் கருதியோ?
(என்றவாறு).