குறள் 317

இன்னாசெய்யாமை

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை

yenaiththaanum yenjgnyaanrum yaarkkum manaththaanaam
maanaasei yaamai thalai


Shuddhananda Bharati

non

Any, anywhere injure not
At any time even in thought.


GU Pope

Not doing Evil

To work no wilful woe, in any wise, through all the days,
To any living soul, is virtue's highest praise.

It is the chief of all virtues not knowingly to do any person evil, even in the lowest degree, and at any time.


Mu. Varadarajan

எவ்வளவு சிறியதாயினும்‌ எக்காலத்திலும்‌ எவரிடத்திலும்‌ மனத்தால்‌ எண்ணி உண்டாகின்ற துன்பச்‌ செயல்களைச்‌ செய்யாதிருத்தலே சிறந்தது.


Parimelalagar

மனத்தான் ஆம் மாணா - மனத்தோடு உளவாகின்ற இன்னாத செயல்களை; எஞ்ஞான்றும் யார்க்கும் எனைத்தானும் செய்யாமை தலை - எக்காலத்தும் யாவர்க்கும் சிறிதாயினும் செய்யாமை தலையாய அறம்.
விளக்கம்:
(ஈண்டு, மனத்தான் ஆகாத வழிப் பாவம் இல்லை என்பது பெற்றாம். ஆற்றலுண்டாய காலத்தும் ஆகாமையின். 'எஞ்ஞான்றும்' என்றும், எளியார்க்கும் ஆகாமையின், 'யார்க்கும்' என்றும், செயல் சிறிதாயினும் பாவம் பெரிதாகலின், 'எனைத்தானும்' என்றும் கூறினார்.)


Manakkudavar

(இதன் பொருள்) யாதொன்றாயினும், எல்லா நாளும் யாவர்மாட்டும் இன்னாதவற்றை மனத்தினாலும் செய்யாமை நன்று,
(என்றவாறு).