குறள் 316

இன்னாசெய்யாமை

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்

innaa yenaththaan unarndhthavai thunnaamai
vaendum pirankan seyal


Shuddhananda Bharati

non

What you feel as 'pain' to yourself
Do it not to the other-self


GU Pope

Not doing Evil

What his own soul has felt as bitter pain,
From making others feel should man abstain.

Let not a man consent to do those things to another which, he knows, will cause sorrow.


Mu. Varadarajan

ஒருவன்‌ துன்பமானவை என்று தன்‌ வாழ்க்கையில்‌ கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில்‌ செய்யாமல்‌ தவிர்க்க வேண்டும்‌.


Parimelalagar

இன்னா எனத் தான் உணர்ந்தவை-இவை மக்கட்கு இன்னாதன என அனுமானத்தால் தான் அறிந்தவற்றை; பிறன்கண் செயல் துன்னாமை வேண்டும் - பிறன் மாட்டுச் செய்தலை மேவாமை துறந்தவனுக்கு வேண்டும்.
விளக்கம்:
(இன்பத் துன்பங்கள் உயிர்க்குணம் ஆகலின், அவை காட்சி அளவையான் அறியப்படாமை அறிக. அறமும் பாவமும் உளவாவது மனம் உளனாயவழி ஆகலான், 'உணர்ந்தவை' என்றார்.)


Manakkudavar

(இதன் பொருள்) தான் இன்னாதன இவையென்று அறிந்தவற்றைப் பிறற்குச் செய் தலை மேவாமை வேண்டும்,
(என்றவாறு). இஃது இன்னா செய்யாமை வேண்டு மென்றது.