குறள் 313

இன்னாசெய்யாமை

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்

seiyaamal setrraarkkum innaatha seithapin
uiyaa vilumandh tharum


Shuddhananda Bharati

non

Revenging even causeless hate
Bad-blood breeds and baneful heat.


GU Pope

Not doing Evil

Though unprovoked thy soul malicious foes should sting,
Retaliation wrought inevitable woes will bring.

In an ascetic inflict suffering even on those who hate him, when he has not done them any evil, it will afterwards give him irretrievable sorrow.


Mu. Varadarajan

தான்‌ ஒன்றும்‌ செய்யாதிருக்கத்‌ தனக்குத்‌ தீங்கு செய்தவர்க்கும்‌ துன்பமானவற்றைச்‌ செய்தால்‌, செய்த பிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்‌.


Parimelalagar

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் - தான் முன்பு ஓர் இன்னாமை செய்யாதிருக்கத் தன்மேல் செற்றம் கொண்டவர்க்கும் இன்னாதவற்றைத் துறந்தவன் செய்யுமாயின்; உய்யா விழுமம் தரும் - அச்செயல் அவனுக்குக் கடக்க முடியாத இடும்பையைக் கொடுக்கும்.
விளக்கம்:
(அவ்விடும்பையாவது தவம் இழந்து பழியும் பாவமும் எய்துதல்.)


Manakkudavar

(இதன் பொருள்) தானொரு குற்றஞ் செய்யாதிருக்க, தனக்கு இன்னாதவற்றைச் செய்தவர்க்கும், இன்னாதவற்றைச் செய்யின், அஃது உய்வில்லாத நோயைத்தரும். இது காரணமின்றி இன்னாதன் செய்தவர்க்கும் பொல்லாங்கு செய்தலைத் தவிர வேண்டுமென்றது.