குறள் 312

இன்னாசெய்யாமை

கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்

karuththuinnaa seithavak kannum maruththinnaa
seiyaamai maachatrraar koal


Shuddhananda Bharati

non

The spotless hearts seek not revenge
Though Malice does the worst in rage.


GU Pope

Not doing Evil

Though malice work its worst, planning no ill return, to endure,
And work no ill, is fixed decree of men in spirit pure.

It is the determination of the spotless not to do evil, even in return, to those who have cherished enmity and done them evil.


Mu. Varadarajan

ஒருவன்‌ கறுவுகொண்டு துன்பம்‌ செய்த போதிலும்‌ அவனுக்குத்‌ திரும்பத்‌ துன்பம்‌ செய்யாதிருத்தலே மாசற்றவரின்‌ கொள்கையாம்‌.


Parimelalagar

கறுத்து இன்னா செய்த அக்கண்ணும் - தம்மேல் செற்றம் கொண்டு ஒருவன் இன்னாதவற்றைச் செய்த இடத்தும், மறுத்து இன்னா செய்யாமை மாசு அற்றார் கோள் - மீண்டுதாம் அவனுக்கு இன்னாதவற்றைச் செய்யாமையும் அவரது துணிவு.
விளக்கம்:
(இறந்தது தழீஇய எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. அவ் இன்னாதவற்றை உட்கொள்ளாது விடுதல் செயற்பாலது என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) தாஞ்செய்த குற்றத்தினாலே வெகுண்டு, இன்னாதவற்றைத் தமக்குச் செய்தவன் மாட்டும், தாம் அதற்கு மாறாகப் பின்பு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு,
(என்றவாறு).