Kural 311
குறள் 311
சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்
sirappeenum selvam paerinum pirarkkuinnaa
seiyaamai maachatrraar koal
Shuddhananda Bharati
The pure by faith mean pain to none
Though princely wealth by that is won.
GU Pope
Though ill to neighbour wrought should glorious pride of wealth secure,
No ill to do is fixed decree of men in spirit pure.
It is the determination of the spotless not to cause sorrow to others, although they could (by so causing) obtain the wealth which confers greatness.
Mu. Varadarajan
சிறப்பைத் தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்.
Parimelalagar
சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் - யோகமாகிய சிறப்புத் தரும் அணிமா முதலிய செல்வங்களைப் பிறர்க்கு இன்னா செய்து பெறலாமாயினும்; பிறர்க்கு இன்னா செய்யாமை மாசு அற்றார் கோள் - அதனைச் செய்யாமை ஆகமங்கள் கூறிய ஆற்றான் மனந்தூயாரது துணிவு.
விளக்கம்:
(உம்மை பெறாமை மேற்று. சிறப்பு உடையதனைச் சிறப்பு' என்றும், அதன் பயிற்சியான் வாயுவை வென்று எய்தப்படுதலின் எட்டுச் சித்திகளையும் 'சிறப்பு ஈனும் செல்வம்' என்றும், காமம் வெகுளி மயக்கம் என்னும் குற்றங்கள் அற்றாமையான் 'மாசு அற்றார்' என்றும் கூறினார். இதனான் தமக்கொரு பயன் நோக்கிச் செய்தல் விலக்கப்பட்டது.)
Manakkudavar
(இதன் பொருள்) மிகுதியைத் தருகின்ற செல்வத்தைப் பெறினும், பிறர்க்கு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு,
(என்றவாறு). இது பழி வாராத செல்வம் பெறினும் தவிர வேண்டு மென்றது.