குறள் 29

நீத்தார் பெருமை

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது

kunamaennum kunraeri ninraar vaekuli
kanamaeyum kaaththal arithu


Shuddhananda Bharati

The merit of Ascetics

Their wrath, who've climb'd the mount of good,
Though transient, cannot be withstood.


GU Pope

The Greatness of Ascetics

The wrath 'tis hard e'en for an instant to endure,
Of those who virtue's hill have scaled, and stand secure.

The anger of those who have ascended the mountain of goodness, though it continue but for a moment, cannot be resisted.


Mu. Varadarajan

நல்ல பண்புகளாகிய மலையின்மேல்‌ ஏறிநின்ற பெரியோர்‌, ஒரு கணப்பொழுதே சினம்‌ கொள்வார்‌ ஆயினும்‌ அதிலிருந்து ஒருவரைக்‌ காத்தல்‌ அரிதாகும்‌.


Parimelalagar

குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி - துறவு, மெய்யுணர்வு, அவாவின்மை முதலிய நற்குணங்கள் ஆகிய குன்றின் முடிவின்கண் நின்ற முனிவரது வெகுளி; கணம் ஏயும் காத்தல் அரிது - தான் உள்ள அளவு கணமே ஆயினும், வெகுளப்பட்டாரால் தடுத்தல் அரிது.
விளக்கம்:
(சலியாமையும், பெருமையும் பற்றிக் குணங்களைக் குன்றாக உருவகம் செய்தார். குணம் சாதியொருமை. அநாதியாய் வருகின்றவாறு பற்றி ஒரேவழி வெகுளி தோன்றியபொழுதே அதனை மெய்யுணர்வு அழிக்கும் ஆகலின், 'கணம் ஏயும்' என்றும், நிறைமொழி மாந்தர் ஆகலின், 'காத்தல் அரிது' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அவர் ஆணை கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) குணமாகிய மலையை மேற்கொண்டு நின்றார் மாட்டு உளதாகிய வெகுளியால் வருந்தீமையைச் சிறிது பொழுதாயினும் வாராமற் காத்தலரிது. நகுஷன் பெரும்பாம்பாயினான். இது வெகுளி பொறுத்தலரிதென்றது.