குறள் 28

நீத்தார் பெருமை

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்

niraimoli maandhthar paerumai nilaththu
maraimoli kaatti vidum


Shuddhananda Bharati

The merit of Ascetics

Full-worded men by what they say,
Their greatness to the world display.


GU Pope

The Greatness of Ascetics

The might of men whose word is never vain,
The 'secret word' shall to the earth proclaim.

The hidden words of the men whose words are full of effect, will shew their greatness to the world.


Mu. Varadarajan

பயன்‌ நிறைந்த மொழிகளில்‌ வல்ல சான்றோரின்‌ பெருமையை, உலகத்தில்‌ அழியாமல்‌ விளங்கும்‌ அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்‌.


Parimelalagar

நிறைமொழி மாந்தர் பெருமை - நிறைந்த மொழியினை உடைய துறந்தாரது பெருமையை; நிலத்து மறைமொழி காட்டிவிடும் - நிலவுலகத்தின்கண் அவர் ஆணையாகச் சொல்லிய மந்திரங்களே கண்கூடாகக் காட்டும்.
விளக்கம்:
('நிறைமொழி' என்பது, அருளிக் கூறினும், வெகுண்டு கூறினும், அவ்வப் பயன்களைப் பயந்தேவிடும் மொழி. காட்டுதல்: பயனான் உணர்த்துதல்.)


Manakkudavar

(இதன் பொருள்) நிரம்பிய கல்வியையுடைய மாந்தரது பெருமையை அவராற் சொல்லப்பட்டு நிலத்தின்கண் வழங்காநின்ற மந்திரங்களே காட்டும்,
(என்றவாறு).இஃது அவராணை நடக்குமென்று கூறிற்று.