Kural 269
குறள் 269
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு
kootrram kuthiththalum kaikoodum notrralin
aatrral thalaippat davarkku
Shuddhananda Bharati
They can even defy death
Who get by penance godly strength.
GU Pope
E'en over death the victory he may gain,
If power by penance won his soul obtain.
Those who have attained the power which religious discipline confers, will be able also to pass the limit of Yama, (the God of death).
Mu. Varadarajan
தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால்) யமனை வெல்லுதலும் கைகூடும்.
Parimelalagar
கூற்றம் குதித்தலும் கைகூடும் - கூற்றத்தைக் கடத்தலும் உண்டாவதாம்; நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு - தவத்தான் வரும் ஆற்றலைத் தலைப்பட்டார்க்கு.
விளக்கம்:
(சிறப்பு உம்மை கூடாமை விளக்கிற்று. மன் உயிர் எல்லாம் தொழுதலேயன்றி இதுவும் கைக்கூடும் என எச்ச உம்மையாக உரைப்பினும் அமையும். ஆற்றல் - சாப அருள்கள். இவை நான்கு பாட்டானும் தவம் செய்வாரது உயர்ச்சி கூறப்பட்டது.)
Manakkudavar
(இதன் பொருள்) கூற்றத்தைத் தப்புதலுங் கை கூடும்; தவத்தினாகிய வலியைக் கூடினார்க்கு,
(என்றவாறு). இது மார்க்கண்டேயன் தப்பினாற்போல் வென்றது.