குறள் 267

தவம்

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு

sudachsudarum ponpol olividum thunpanj
sudachsuda notrkitr pavarkku


Shuddhananda Bharati

Penance

Pure and bright gets the gold in fire;
and so the life by pain austere.


GU Pope

Penance

The hotter glows the fining fire, the gold the brighter shines;
The pain of penitence, like fire, the soul of man refines.

Just as gold is purified as heated in the fire, will those shine, who have endured the burning of pain (in frequent austerities).


Mu. Varadarajan

புடமிட்டுச்‌ சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப்‌ போல்‌, தவம்‌ செய்கின்றவரைத்‌ துன்பம்‌ வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும்‌.


Parimelalagar

சுடச்சுடரும் பொன் போல்-தீயின்கண் ஓடும் பொன்னுக்கு அது சுடச்சுடத் தன்னோடு கலந்த குற்றம் நீங்கி ஒளிமிகுமாறு போல; நோற்கிற்பவர்க்குத் துன்பம் சுடச்சுட ஒளி விடும்-தவம் செய்ய வல்லார்க்கு அதனான் வரும் துன்பம் வருத்த வருத்தத் தம்மொடு கலந்த பாவம் நீங்கி ஞானம் மிகும்.
விளக்கம்:
('சுடச்சுடரும் பொன் போல' என்றார் ஆயினும், கருத்து நோக்கி இவ்வாறு உரைக்கப்பட்டது. ஒளி போலப் பொருள்களை விளக்கலின். 'ஒளி' என்றார்.)


Manakkudavar

(இதன் பொருள்) நெருப்பின்கண்ணே இட இடத் தன்னோடு கலந்த மாசற்று ஒளிவிடுகின்ற பொன்னைப்போல், துன்பம் நலிய நலியத் தவஞ் செய்வார்க்குத் தம்மோடு மருவின் வினை விட்டு ஒளிவிடும்,
(என்றவாறு). இது வினைவிட் டொளி யுண்டாம் என்றது.