Kural 266
குறள் 266
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு
thavanjseivaar thangkarumanj seivaarmatr rallaar
avanjseivaar aasaiyut patdu
Shuddhananda Bharati
Who do penance achieve their aim
Others desire-rid themselves harm.
GU Pope
Who works of 'penance' do, their end attain,
Others in passion's net enshared, toil but in vain.
Those discharge their duty who perform austerities; all others accomplish their own destruction, through the entanglement of the desire (of riches and sensual pleasure).
Mu. Varadarajan
தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமைகளைச் செய்கின்றவர் ஆவர்; அவர் அல்லாத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டு வீண்முயற்சி செய்கின்றவரே.
Parimelalagar
தம் கருமம் செய்வார் தவம் செய்வார் - தம் கருமம் செய்வாராவர் துறந்து தவத்தைச் செய்வார்; மற்று அல்லார் ஆசையுள் பட்டு அவம் செய்வார் - ஒழிந்த பொருள் இன்பங்களைச் செய்வார், அவற்றின்கண் ஆசையாகிய வலையுள்பட்டுத் தமக்குக் கேடு செய்வார்.
விளக்கம்:
(அநித்தமாய் மூவகைத் துன்பத்தாய் உயிரின் வேறாய உடற்கு வருத்தம் வரும் என்று ஒழியாது தவத்தினைச் செய்ய, பிறப்புப் பிணிமூப்பு இறப்புக்களான் அநாதியாகத் துன்பம் எய்திவருகின்ற உயிர் ஞானம் பிறந்து வீடு பெறும் ஆகலின், தவம் செய்வாரைத் 'தம் கருமம் செய்வார்' என்றும், கணத்துள் அழிவதான சிற்றின்பத்தின் பொருட்டுப் பலபிறவியும் துன்புறத்தக்க பாவஞ்செய்து கோடலின், அல்லாதாரை 'அவம் செய்வார்' என்றும் கூறினார். 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது.)
Manakkudavar
(இதன் பொருள்) தங்கருமஞ் செய்வார் தவஞ் செய்வார்; அஃதல்லாதன செய்வா ரெல்லாம் ஆசையிலே யகப்பட்டுப் பயனில்லாதன செய்கின்றார்,
(என்றவாறு). இது தவம் பண்ண வேண்டுமென்றது.