Kural 261
குறள் 261
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு
utrranoi nonral uyirkkurukan seiyaamai
atrrae thavaththitr kuru
Shuddhananda Bharati
Pains endure; pain not beings
This is the type of true penance.
GU Pope
To bear due penitential pains, while no offence
He causes others, is the type of 'penitence'.
The nature of religious discipline consists, in the endurance (by the ascetic) of the sufferings which it brings on himself, and in abstaining from giving pain to others.
Mu. Varadarajan
தான் பெற்ற துன்பத்தைப் பொறுத்தலும் மற்ற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகியவைகளே தவத்திற்கு வடிவமாகும்.
Parimelalagar
தவத்திற்கு உரு-தவத்தின் வடிவு; உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே-உண்டி சுருக்கல் முதலியவற்றால் தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்தலும், தாம் பிற உயிர்கட்குத் துன்பம் செய்யாமையும் ஆகிய அவ்வளவிற்று.
விளக்கம்:
(மற்றுள்ளன எல்லாம் இவற்றுள்ளே அடங்குதலின், 'அற்றே' எனத் தேற்றேகாரம் கொடுத்தார். 'தவத்திற்கு உரு அற்று' என்பது, 'யானையது கோடு கூரிது' என்பதனை, 'யானைக்குக் கோடு கூரிது' என்றார்போல ஆறாவதன் பொருட்கண் நான்காவது வந்த மயக்கம். இதனான் தவத்தினது இலக்கணம் கூறப்பட்டது.) --
Manakkudavar
தவமாவது ஊணும் உறக்கமும் குறைத்தலும், வெயிலும் பனியும் தாங் கலும், தேவர் வழிபாடு முதலாயினவும் மேற்கொண்டு முயறல். (இதன் பொருள்) தமக்கு உற்றநோயைப் பொறுத்தலும் பிறவுயிர்க்கு நோய்செய் யாமையுமாகிய அத்தன்மையே தவத்திற்கு வடிவமாம்,
(என்றவாறு).