Kural 260
குறள் 260
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்
kollaan pulaalai maruththaanaik kaikooppi
yellaa uyirundh tholum
Shuddhananda Bharati
All lives shall lift their palms to him
Who eats not flesh nor kills with whim.
GU Pope
Who slays nought,- flesh rejects- his feet before
All living things with clasped hands adore.
All creatures will join their hands together, and worship him who has never taken away life, nor eaten flesh.
Mu. Varadarajan
ஒருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.
Parimelalagar
கொல்லான் புலாலை மறுத்தானை - ஓர் உயிரையும் கொல்லாதவனுமாய்ப் புலாலையும் உண்ணாதவனை; எல்லா உயிரும் கை கூப்பித் தொழும் - எல்லா உயிரும் கை கூப்பித் தொழும் - எல்லா உயிரும் கை குவித்துத் தொழும்.
விளக்கம்:
கொல்லான் புலாலை மறுத்தானை - ஓர் உயிரையும் கொல்லாதவனுமாய்ப் புலாலையும் உண்ணாதவனை; எல்லா உயிரும் கை கூப்பித் தொழும் - எல்லா உயிரும் கை கூப்பித் தொழும் - எல்லா உயிரும் கை குவித்துத் தொழும். (இவ்விரண்டு அறமும் ஒருங்கு உடையார்க்கு அல்லது ஒன்றே உடையார்க்கு அதனால் பயன் இல்லை ஆகலின், கொல்லாமையும் உடன் கூறினார். இப்பேரருள் உடையான் மறுமைக்கண் தேவரின் மிக்கான் ஆம் என அப் பயனது பெருமை கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் ஊன் உண்ணாமையது உயர்ச்சி கூறப்பட்டது.)
Manakkudavar
(இதன் பொருள்) கொல்லானுமாய்ப் புலாலையுண்டலையுந் தவிர்த்தவனை, கை குவித்து எல்லாவுயிருந் தொழும்,
(என்றவாறு) மேல் எல்லாப் புண்ணியத்திலும் இது நன்றென்றார் அது யாதினைத் தரும் மென்றார்க்கு, கொல்லாதவன் தேவர்க்கும் மேலாவனென்று கூறினார்.