Kural 259
குறள் 259
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று
avisorindh thaayiram vaetdalin onran
uyirsekuth thunnaamai nanru
Shuddhananda Bharati
Not to-kill-and-eat, truly
Excels thousand pourings of ghee!
GU Pope
Than thousand rich oblations, with libations rare,
Better the flesh of slaughtered beings not to share.
Not to kill and eat (the flesh of) an animal, is better than the pouring forth of ghee etc., in a thousand sacrifices.
Mu. Varadarajan
நெய் முதலிய பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலைவிட, ஒன்றன் உயிரைக் கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.
Parimelalagar
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின்-தீயின்கண் நெய் முதலிய அவிகளைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும்; ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை நன்று-ஒரு விலங்கின் உயிரைப் போக்கி அது நின்ற ஊனை உண்ணாமை நன்று.
விளக்கம்:
(அவ்வேள்விகளான் வரும் பயனினும் இவ்விரதத்தான் வரும் பயனே பெரிது என்பதாம்.)
Manakkudavar
(இதன் பொருள்) நெய் முதலான அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலி னும், ஒன்றினுயிரை நீக்கி அதனுடம்பை யுண்ணாமை நன்று,
(என்றவாறு).