குறள் 240

புகழ்

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்

vasaiyoliya vaalvaarae vaalvaar isaiyoliya
vaalvaarae vaalaa thavar


Shuddhananda Bharati

Renown

They live who live without blemish
The blameful ones do not flourish.


GU Pope

Renown

Who live without reproach, them living men we deem;
Who live without renown, live not, though living men they seem.

Those live who live without disgrace. Those who live without fame live not.


Mu. Varadarajan

தாம்‌ வாழும்‌ வாழ்க்கையில்‌ பழி உண்டாகாமல்‌ வாழ்கின்றவரே உயிர்‌ வாழ்கின்றவர்‌; புகழ்‌ உண்டாகாமல்‌ வாழ்கின்றவரே உயிர்‌ வாழாதவர்‌.


Parimelalagar

வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் - தம்மாட்டு வசை உண்டாகாமல் வாழ்வாரே உயிர் வாழ்வாராவார்; இசை ஒழிய வாழ்வாரே வாழாதவர் - புகழ் உண்டாகாமல் வாழ்வாரே இறந்தார் ஆவார்.
விளக்கம்:
(வசையொழிதலாவது இசை என்னும் எச்சம் பெறுதல் ஆயினமையின்; இசையொழிதலாவது வசை பெறுதலாயிற்று. மேல், 'இசை இலாயாக்கை' என்றதனை விளக்கியவாறு. இதனான் இவ்விரண்டும் உடன் கூறப்பட்டன. மறுமைப்பயன் 'வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்' (குறள் 50) என மேலே கூறப்பட்டது. படவே இல்லறத்திற்கு இவ்வுலகில் புகழும், தேவர் உலகில் போகமும் பயன் என்பது பெற்றாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) வசையொழிய வாழு மவர்களே உயிர் வாழ்வாராவர்; புகழொழிய வாழ்வாரே உயிர் வாழாதார், (எ - று ). இது புகழில்லார் பிணத்தோ டொப்ப ரென்றது.