குறள் 241

அருளுடைமை

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள

arutselvam selvaththul selvam porutselvam
pooriyaar kannum ula


Shuddhananda Bharati

Compassion

The wealth of wealth is wealth of grace
Earthly wealth e'en the basest has.


GU Pope

The Possession of Benevolence

Wealth 'mid wealth is wealth 'kindliness';
Wealth of goods the vilest too possess.

The wealth of kindness is wealth of wealth, in as much as the wealth of property is possessed by the basest of men.


Mu. Varadarajan

பொருள்களாகிய செல்வங்கள்‌ இழிந்தவரிடத்திலும்‌ உள்ளன; (உயர்ந்தவரிடத்தில்‌ மட்டும்‌ உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில்‌ சிறந்த செல்வமாகும்‌.


Parimelalagar

செல்வத்துள் செல்வம் அருட் செல்வம் - செல்வங்கள் பவற்றுள்ளும் ஆராய்ந் தெடுக்கப்பட்ட செல்வமாவது அருளான்வரும் செல்வம்; பொருட் செல்வம் பூரியார் கண்ணும் உள-அஃது ஒழிந்த பொருளான்வரும் செல்வங்கள் இழிந்தார்கண்ணும் உளவாம் ஆகலான்.
விளக்கம்:
(அருளான் வரும் செல்வமாவது, உயிர்களை ஓம்பி அவ்வறத்தான் மேம்படுதல். உயர்ந்தார்கண்ணே அல்லது இல்லாத அருட்செல்வமே சிறப்புடைய செல்வம்: ஏனை நீசர்கண்ணும் உளவாம் பொருட் செல்வங்கள் சிறப்பு இல என்பதாம்.)


Manakkudavar

அருளுடைமையாவது யாதானுமோருயிர் இடர்ப்படின் அதற்குத் தன் னுயிர்க்கு உற்ற துன்பத்தினால் வருந்துமாறு போல் வருந்தும் ஈரமுடைமை. (இதன் பொருள்) செல்வத்துள் வைத்துச் செல்வமாவது அருளுடைமையாகிய செல்வமாம்; பொருட் செல்வமானது கீழாயினோர்மாட்டும் உளவாதலால், (எ-று) இஃது அருள் நிலை கூறிற்று.