குறள் 239

புகழ்

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்

vasaiyilaa vanpayan kunrum isaiyilaa
yaakkai poruththa nilam


Shuddhananda Bharati

Renown

The land will shrink in yield if men
O'erburden it without renown.


GU Pope

Renown

The blameless fruits of fields' increase will dwindle down,
If earth the burthen bear of men without renown.

The ground which supports a body without fame will diminish in its rich produce.


Mu. Varadarajan

புகழ்‌ பெறாமல்‌ வாழ்வைக்‌ கழித்தவருடைய உடம்பைச்‌ சுமந்த நிலம்‌, வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல்‌ குன்றிவிடும்‌.


Parimelalagar

இசைஇலா யாக்கை பொறுத்த நிலம்-புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த நிலம்; வசை இலா வண்பயன் குன்றும்-பழிப்பு இல்லாத வளப்பத்தை உடைய விளையுள் குன்றும்.
விளக்கம்:
(உயிர் உண்டாயினும் அதனால் பயன் கொள்ளாமையின் 'யாக்கை' எனவும், அது நிலத்திற்குப் பொறையாகலின், 'பொறுத்த' எனவும் கூறினார். விளையுள் குன்றுதற்கேது. பாவ யாக்கையைப் பொறுக்கின்ற வெறுப்பு. 'குன்றும்' என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. இவை நான்கு பாட்டானும் புகழ் இல்லாதாரது தாழ்வு கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) புகழில்லாத வுடம்பைப் பொறுத்த நிலம் பழியற்ற நல்விளைவு குறையும்,
(என்றவாறு). இது புகழில்லாதானிருந்தவிடம் விளைவு குன்று மென்றது.