குறள் 24

நீத்தார் பெருமை

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து

uranaennum thottiyaan oaraindhthum kaappaan
varanaennum vaippitrkoar viththu


Shuddhananda Bharati

The merit of Ascetics

With hook of firmness to restrain
The senses five, is heaven to gain.


GU Pope

The Greatness of Ascetics

He, who with firmness, curb the five restrains,
Is seed for soil of yonder happy plains.

He who guides his five senses by the hook of wisdom will be a seed in the world of heaven.


Mu. Varadarajan

அறிவு என்னும்‌ கருவியினால்‌ ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கிக்‌ காக்க வல்லவன்‌, மேலான வீட்டிற்கு விதை போன்றவன்‌.


Parimelalagar

உரன் என்னும் தோட்டியான் ஒர் ஐந்தும் காப்பான் - திண்மை என்னும் தோட்டியால் பொறிகள் ஆகிய யானை ஐந்தினையும் தத்தம் புலங்கள்மேல் செல்லாமல் காப்பான்; வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து - எல்லா நிலத்திலும் மிக்கது என்று சொல்லப்படும் வீட்டு நிலத்திற்கு ஓர் வித்து ஆம்.
விளக்கம்:
(இஃது ஏகதேச உருவகம். திண்மை ஈண்டு அறிவின் மேற்று. அந் நிலத்திற்சென்று முளைத்தலின், 'வித்து' என்றார். ஈண்டுப் பிறந்து இறந்து வரும் மகனல்லன் என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) அறிவாகிய தோட்டியானே பொறியாகிய யானையைந்தினையும் புலன்களிற் செல்லாமல் மீட்பவன் மேலாகியவிடத்தே யாதற்கு இவ்விடத்தே யிருப்பதொரு வித்து,
(என்றவாறு). பெருமை சொல்லுவார் முற்பட்ட மக்கள் தன்மையனாய் இவ்வுலகின்கண் வாழ்பவனல்லன்; தேவருளொருவனென்று கூறினார்.