குறள் 236

புகழ்

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று

thonrin pukalodu thonruka akhthilaar
thonralin thonraamai nanru


Shuddhananda Bharati

Renown

Be born with fame if birth you want
If not of birth you must not vaunt.


GU Pope

Renown

If man you walk the stage, appear adorned with glory's grace;
Save glorious you can shine, 'twere better hide your face.

If you are born (in this world), be born with qualities conductive to fame. From those who are destitute of them it will be better not to be born.


Mu. Varadarajan

ஒரு துறையில்‌ முற்பட்டுத்‌ தோன்றுவதானால்‌ புகழோடு தோன்ற வேண்டும்‌; அத்தகைய சிறப்பு இல்லாதவர்‌ அங்குத்‌ தோன்றுவதைவிடத்‌ தோன்றாமலிருப்பது நல்லது.


Parimelalagar

தோன்றின் புகழொடு தோன்றுக-மக்களாய்ப் பிறக்கின் புகழுக்கு ஏதுவாகிய குணத்தோடு பிறக்க; அஃது இலார் தோன்றலின் தோன்றாமை நன்று - அக்குணம் இல்லாதார் மக்களாய்ப் பிறத்தலின் விலங்காய்ப் பிறத்தல் நன்று.
விளக்கம்:
(புகழ்; ஈண்டு ஆகுபெயர். 'அஃது இலார்' என்றமையின் மக்களாய் என்பதூஉம், 'மக்களாய்ப் பிறவாமை' என்ற அருத்தாபத்தியான் 'விலங்காய்ப் பிறத்தல்' என்பதூஉம் பெற்றாம். இகழ்வார் இன்மையின் 'நன்று' என்றார்.)


Manakkudavar

(இதன் பொருள்) பிறக்கிற் புகழுண்டாகப் பிறக்க ; அஃதிலார் பிறக்குமதிற் பிறவாமை நன்று,
(என்றவாறு) இது புகழ்பட வாழவேண்டு மென்றது.