Kural 200
குறள் 200
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்
solluka sollitr payanutaiya sollatrka
sollitr payanilaach sol
Shuddhananda Bharati
To purpose speak the fruitful word
And never indulge in useless load.
GU Pope
The Not Speaking Profitless Words
If speak you will, speak words that fruit afford,
If speak you will, speak never fruitless word.
Speak what is useful, and speak not useless words.
Mu. Varadarajan
சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும்; பயன் இல்லாதவைகளாகிய சொற்களைச் சொல்லவேகூடாது.
Parimelalagar
சொல்லில் பயன் உடைய சொல்லுக - சொற்களில் பயன் உடைய சொற்களைச் சொல்லுக; சொல்லில் பயனில்லாச் சொல் சொல்லற்க - சொற்களில் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாது ஒழிக.
விளக்கம்:
('சொல்லில்' என்பது இருவழியும் மிகையாயினும், சொற் பொருட் பின்வரு நிலை என்னும் அணி நோக்கி வந்தது, ''வைகலும் வைகல் வரக்கண்டும்'' (நாலடி. 39) என்பது போல. இதனால் சொல்லப்படுவனவும் படாதனவும் நியமிக்கப்பட்டன.)
Manakkudavar
(இதன் பொருள்) சொல்லுவனாயின் பயனுடைய சொற்களைச் சொல்லுக; சொற் களிற் பயனில்லாத சொற்களைச் சொல்லா தொழிக,
(என்றவாறு). இது பயனில் சொல்லாமை வேண்டுமென்றது.