குறள் 201

தீவினையச்சம்

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு

theevinaiyaar anjsaar vilumiyaar anjsuvar
theevinai yennum serukku


Shuddhananda Bharati

Fear of sin

Sinners fear not the pride of sin.
The worthy dread the ill within.


GU Pope

Dread of Evil Deeds

With sinful act men cease to feel the dread of ill within,
The excellent will dread the wanton pride of cherished sin.

Those who have experience of evil deeds will not fear, but the excellent will fear the pride of sin.


Mu. Varadarajan

தீயவை செய்தலாகிய செருக்கைத்‌ தீவினை உடைய பாவிகள்‌ அஞ்சார்‌; தீவினை இல்லாத மேலோர்‌ மட்டுமே அஞ்சுவர்‌.


Parimelalagar

தீவினை என்னும் செருக்கு-தீவினை என்று சொல்லப்படும் மயக்கத்தை; தீவினையார் அஞ்சார்-முன் செய்த தீவினையுடையார் அஞ்சார்; விழுமியார் அஞ்சுவர்-அஃது இலராகிய சீரியர் அஞ்சுவர்.
விளக்கம்:
('தீவினை என்னும் செருக்கு' எனக் காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. மேல் தொட்டுச் செய்து கைவந்தமையான் 'அஞ்சார்' என்றும், செய்த அறியாமையான் 'அஞ்சுவர்' என்றும் கூறினார்.)


Manakkudavar

தீவினையச்சமாவது தீவினைகளைப் பிறர்க்குச் செய்யாமை. (இதன் பொருள்). என்றுந் தீத்தொழில் செய்வா ரஞ்சார்; சீரியரஞ்சுவர்; தீவினை யாகிய களிப்பை , (எ - று ). இஃது இதற்கு நல்லோ ரஞ்சுவ ரென்றது.