குறள் 20

வான் சிறப்பு

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு

neerinru amaiyaathu ulakenin yaaryaarkkum
vaaninru amaiyaathu olukku


Shuddhananda Bharati

The blessing of Rain

Water is life that comes from rain
Sans rain our duties go in vain.


GU Pope

The Excellence of Rain

When water fails, functions of nature cease, you say;
Thus when rain fails, no men can walk in 'duty's ordered way'.

If it be said that the duties of life cannot be discharged by any person without water, so without rain there cannot be the flowing of water.


Mu. Varadarajan

எப்படிப்பட்டவர்க்கும்‌ நீர்‌ இல்லாமல்‌ உலக வாழ்க்கை நடைபெறாது என்றால்‌, மழை இல்லையானால்‌ ஒழுக்கமும்‌ நிலைபெறாமல்‌ போகும்‌.


Parimelalagar

யார் யார்க்கும் நீர் இன்று உலகு அமையாது எனின்-எவ்வகை மேம்பாட்டார்க்கும் நீரை இன்றி உலகியல் அமையாது ஆயின்; ஒழுக்கு வான் இன்று அமையாது - அந்நீர் இடையறாது ஒழுகும் ஒழுக்கும் வானை இன்றி அமையாது.
விளக்கம்:
(பொருள் இன்பங்களை 'உலகியல்' என்றார். அவை இம்மைக்கண்ண ஆகலின். இடையறாது ஒழுகுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் உளதாகல். நீர் இன்று அமையாது உலகு என்பது எல்லாரானும் தெளியப்படுதலின், அதுபோல ஒழுக்கும் வான் இன்று அமையாமை தெளியப்படும் என்பார், 'நீர் இன்று அமையாது உலகு எனின்' என்றார். இதனை, 'நீரை இன்றி அமையாது உலகு ஆயின் எத்திறத்தார்க்கும் மழையை இன்றி ஒழுக்கம் நிரம்பாது' என உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அறம் பொருள் இன்பங்கள் நடத்தற்கு ஏதுவாதல் கூறப்பட்டது.


Manakkudavar

(இதன் பொருள்) நீரையின்றி யுலகம் அமையாதாயின், யாவர்க்கும் மழையை யின்றி ஒழுக்கம் உண்டாகாது,
(என்றவாறு). ஒழுக்கம் - விரதம். இஃது ஆசாரங்கெடுமென்றது. இவை மூன்றினானும் நான்கறமுங் கெடுமென்று கூறினார்.