Kural 198
குறள் 198
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்
arumpayan aayum arivinaar sollaar
paerumpayan illaatha sol
Shuddhananda Bharati
The wise who weigh the worth refrain
From words that have no grain and brain.
GU Pope
The Not Speaking Profitless Words
The wise who weigh the worth of every utterance,
Speak none but words of deep significance.
The wise who seek after rare pleasures will not speak words that have not much weight in them.
Mu. Varadarajan
அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்.
Parimelalagar
அரும்பயன் ஆயும் அறிவினார்-அறிதற்கு அரிய பயன்களை ஆராய வல்ல அறிவினையுடையார்; பெரும்பயன் இல்லாத சொல் சொல்லார் - மிக்க பயனுடைய அல்லாத சொற்களைச் சொல்லார்.
விளக்கம்:
(அறிதற்கு அரிய பயன்களாவன: வீடு பேறும் மேற்கதிச் செலவும் முதலாயின. 'பெரும்பயன் இல்லாத' எனவே பயன் சிறிதும் உடையனவும் ஒழிக்கப்பட்டன.)
Manakkudavar
(இதன் பொருள்) அரிய பொருளை யாராயும் அறிவினையுடையார் சொல்லார் ; பெரிய பயனில்லாத சொற்களை,
(என்றவாறு). இது மேற் கூறிய குற்றமெல்லாம் பயத்தலின், இதனை யறிவுடையார் கூறா ரென்றது.