குறள் 196

பயனில சொல்லாமை

பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்

payanilsol paaraatdu vaanai makanyenal
makkat pathati yaenal


Shuddhananda Bharati

Against vain speaking

Call him a human chaff who prides
Himself in weightless idle words.


GU Pope

The Not Speaking Profitless Words

Who makes display of idle words' inanity,
Call him not man, -chaff of humanity!

Call not him a man who parades forth his empty words. Call him the chaff of men.


Mu. Varadarajan

பயனில்லாத சொற்களைப்‌ பலமுறையும்‌ சொல்லுகின்ற ஒருவனை மனிதன்‌ என்று சொல்லக்கூடாது; மக்களுள்‌ பதர்‌ என்றே சொல்ல வேண்டும்‌.


Parimelalagar

பயன் இல் சொல் பாராட்டுவானை மகன் எனல்-பயன் இல்லாத சொற்களைப் பலகாலுஞ் சொல்லுவானை மகன் என்று சொல்லற்க; மக்கட் பதடி எனல் - மக்களுள் பதர் என்று சொல்லுக.
விளக்கம்:
('அல்' விகுதி வியங்கோள்; முன் எதிர்மறையினும், பின் உடன்பாட்டினும் வந்தது. அறிவு என்னும் உள்ளீடு இன்மையின், 'மக்கள் பதடி' என்றார். இவை ஆறு பாட்டானும் பயன் இல்லாத சொற்களைச் சொல்லுதலின் குற்றம் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) பயனில்லாத சொல்லைக் கொண்டாடுவானை மகனென்னா தொழிக; மக்களில் பதரென்று சொல்லுக,
(என்றவாறு) இது மக்கட் பண்பிலனென்றது.