குறள் 195

பயனில சொல்லாமை

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்

seermai sirappodu neengkum payanila
neermai yutaiyaar solin


Shuddhananda Bharati

Against vain speaking

Glory and grace will go away
When savants silly nonsense say.


GU Pope

The Not Speaking Profitless Words

Gone are both fame and boasted excellence,
When men of worth speak of words devoid of sense.

If the good speak vain words their eminence and excellence will leave them.


Mu. Varadarajan

பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர்‌ சொல்லுவாரானால்‌, அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்‌.


Parimelalagar

பயன் இல நீர்மையுடையார் சொலின்-பயன் இலவாகிய சொற்களை இனிய நீர்மையுடையார் சொல்லுவாராயின்; சீர்மை சிறப்பொடு நீங்கும் - அவரது விழுப்பமும் அதனால் வரும் நன்கு மதிக்கற்பாடும் உடனே நீங்கும்.
விளக்கம்:
(நீர்மை: நீரின் தன்மை. 'சொல்லின்' என்பது சொல்லாமையை விளக்கிற்று.)


Manakkudavar

(இதன் பொருள்) பயனில்லாதவற்றை நீர்மையுடையார் கூறுவாராயின், அவர்க்கு உண்டான சீர்மையும் சிறப்பும் போம்,
(என்றவாறு). இது நீர்மையுடையா ராயினும் எல்லா நன்மையும் போமென்றது.