குறள் 193

பயனில சொல்லாமை

நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை

nayanilan yenpathu sollum payanila
paarith thuraikkum urai


Shuddhananda Bharati

Against vain speaking

The babbler's hasty lips proclaim
That "good-for-nothing" is his name.


GU Pope

The Not Speaking Profitless Words

Diffusive speech of useless words proclaims
A man who never righteous wisdom gains.

That conversation in which a man utters forth useless things will say of him "he is without virtue."


Mu. Varadarajan

ஒருவன்‌ பயனில்லாத பொருள்களைப்‌ பற்றி விரிவாகச்‌ சொல்லும்‌ சொற்கள்‌, அவன்‌ அறம்‌ இல்லாதவன்‌ என்பதை அறிவிக்கும்‌.


Parimelalagar

பயன் இல பாரித்து உரைக்கும் உரை - பயன் இலவாகிய பொருள்களை ஒருவன் விரித்து உரைக்கும் உரைதானே; நயன் இலன் என்பது சொல்லும் - இவன் நீதி இலன்' என்பதனை உரைக்கும்.
விளக்கம்:
(உரையால் இவன் 'நயனிலன்' என்பது அறியலாம் என்பார், அதனை உரைமேல் ஏற்றி, 'உரை சொல்லும்' என்றார்.)


Manakkudavar

(இதன் பொருள்) நயனுடைய னல்ல னென்பதனை யறிவிக்கும்; பயனில்லாதவற் றைப் பரக்க விட்டுச் சொல்லுஞ் சொற்கள்,
(என்றவாறு). இது பயனில் சொல்வார் இம்மையின் கண் பிறராலியம்பப்படாரென்றது.