குறள் 192

பயனில சொல்லாமை

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது

payanila pallaarmun sollal nayanila
nattaarkan seithalitr reethu


Shuddhananda Bharati

Against vain speaking

Vain talk before many is worse
Than doing to friends deeds adverse.


GU Pope

The Not Speaking Profitless Words

Words without sense, where many wise men hear, to pour
Than deeds to friends ungracious done offendeth more.

To speak useless things in the presence of many is a greater evil than to do unkind things towards friends.


Mu. Varadarajan

பலர்‌ முன்னே பயனில்லாத சொற்களைச்‌ சொல்லுதல்‌, நண்பரிடத்தில்‌ அறம்‌ இல்லாத செயல்களைச்‌ செய்தலை விடத்‌ தீமையானதாகும்‌.


Parimelalagar

பயன் இல பல்லார்முன் சொல்லல் - பயன் இலவாகிய சொற்களை அறிவுடையார் பலர் முன்பே ஒருவன் சொல்லுதல்; நயன் இல நட்டார்கண் செய்தலின் தீது - விருப்பம் இலவாகிய செயல்களைத் தன் நட்டார் மாட்டுச் செய்தலினும் தீது.
விளக்கம்:
((விருப்பம்இல. வெறுப்பன. இச் சொல் அச்செயலினும் மிக இகழற்பாடு பயக்கும் என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) பயனில்லாதவற்றைப் பலர் முன்பு கூறுதல், விருப்பமில்லாத வற்றை நட்டார்மாட்டுச் செய்தலினுந் தீதே, (எ - று ) இது பயனில சொல்லல் இம்மை மறுமை யிரண்டின் கண்ணுந் தீமை பயக்கு மென்றது.