Kural 191
குறள் 191
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்
pallaar muniyap payanila solluvaan
yellaarum yellap padum
Shuddhananda Bharati
With silly words who insults all
Is held in contempt as banal.
GU Pope
The Not Speaking Profitless Words
Words without sense, while chafe the wise,
Who babbles, him will all despise.
He who to the disgust of many speaks useless things will be despised by all.
Mu. Varadarajan
கேட்டவர் பலரும் வெறுக்கும்படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லோராலும் இகழப்படுவான்.
Parimelalagar
பல்லார் முனிப் பயன் இல சொல்லுவான் - அறிவுடையார் பலரும் கேட்டு வெறுப்பப் பயன்இலவாகிய சொற்களைச் சொல்லுவான்; எல்லாரும் எள்ளப்படும் - எல்லாரானும் இகழப்படும்.
விளக்கம்:
(அறிவுடையார் பலரும் வெறுப்பவே, ஒழிந்தாரானும் இகழப்படுதலின், 'எல்லாரும் எள்ளப்படும்' என்றார். மூன்றன் உருபு விகாரத்தால் தொக்கது.
Manakkudavar
பயனில சொல்லாமையாவது கேட்டார்க்குந் தனக்கும் நற்பயன் படாத சொற்களைக் கூறாமை. (இதன் பொருள்) பயனில்லாதவற்றைப் பலர் வெறுக்கச் சொல்லுமவன், எல்லா ரானும் இகழப்படுவன்,
(என்றவாறு)