குறள் 190

புறங்கூறாமை

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு

yaethilaar kutrrampol thangkutrrang kaankitrpin
theethuntoh mannum uyirkku


Shuddhananda Bharati

Against slander

No harm would fall to any man
If each his own defect could scan.


GU Pope

Not Backbiting

If each his own, as neighbours' faults would scan,
Could any evil hap to living man?

If they observed their own faults as they observe the faults of others, would any evil happen to men ?


Mu. Varadarajan

அயலாருடைய குற்றத்தைக்‌ காண்பதுபோல்‌ தம்‌ குற்றத்தையும்‌ காணவல்லவரானால்‌, நிலைபெற்ற உயிர்‌ வாழ்க்கைக்குத்‌ துன்பம்‌ உண்டோ?


Parimelalagar

ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின்-ஏதிலாரைப் புறங்கூறுவார் அதற்கு அவர் குற்றம் காணுமாறு போலப் புறங்கூறாகிய தம் குற்றத்தையும் காணுமாறு போலப் புறங்கூறலாகிய தம் குற்றத்தையும் காணவல்லராயின்; மன்னும் உயிர்க்குத் தீது உண்டோ - அவர் நிலைபேறுடைய உயிர்க்கு வருவதொரு துன்பம் உண்டோ?
விளக்கம்:
(நடுவு நின்று ஒப்புக்காண்டல் அருமை நோக்கி, 'காண்கிற்பின்' என்றும், கண்டவழி ஒழிதலின் பாவம் இன்றாம், ஆகவே வரும் பிறவிகளினும் துன்பம் இல்லை என்பது நோக்கி, 'உயிர்க்குத் தீது உண்டோ' என்றும் கூறினார். இதனான் புறங்கூற்று ஒழிதற்கு உபாயம் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) அயலார் குற்றம் போலத் தமது குற்றத்தையுங் காண வல்லா ராயின், நிலை பெற்ற வுயிர்க்கு வருந் தீமை யுண்டோ ?
(என்றவாறு). இது காண்பாராயின், சொல்லாரென்று புறஞ் சொல்லாமைக்குக் காரணங் கூறிற்று.