Kural 188
குறள் 188
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு
thunniyaar kutrramum thootrrum marapinaar
yennaikol yaethilaar maatdu
Shuddhananda Bharati
What will they not to strangers do
Who bring their friends' defects to view?
GU Pope
Whose nature bids them faults of closest friends proclaim
What mercy will they show to other men's good name?
What will those not do to strangers whose nature leads them to publish abroad the faults of their intimate friends ?
Mu. Varadarajan
நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?
Parimelalagar
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்-தம்மொடு செறிந்தாரது குற்றத்தையும் அவர் புறத்துத் தூற்றும் இயல்பினை உடையார்; ஏதிலார் மாட்டு என்னை கொல்-அயலார் மாட்டுச் செய்வது யாது கொல்லோ?
விளக்கம்:
('தூற்றுதல்' பலரும் அறியப் பரப்புதல். அதனின் கொடியது பிறிதொன்று காணாமையின், 'என்னைகொல்' என்றார். 'செய்வது' என்பது சொல்லெச்சம். 'என்னர் கொல்' என்று பாடம் ஓதி, 'எவ்வியல்பினராவர்' என்று உரைப்பாரும் உளர்.)
Manakkudavar
(இதன் பொருள்) தம்மோடு செறிந்தார் குற்றத்தையும் பிறர்க்கு உரைக்கின்ற சேதியை யுடையார், செறிவில்லாதார் மாட்டு யாங்ஙனஞ் செய்வரோ?
(என்றவாறு). இது யாவரோடும் பற்றிலரென்றது.