Kural 187
குறள் 187
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்
pakachsollik kaelirp pirippar nakachsolli
natpaadal thaetrraa thavar
Shuddhananda Bharati
By pleasing words who make not friends
Sever their hearts by hostile trends.
GU Pope
With friendly art who know not pleasant words to say,
Speak words that sever hearts, and drive choice friends away.
Those who know not to live in friendship with amusing conversation will by back-biting estrange even their relatives.
Mu. Varadarajan
மகிழும்படியாகப் பேசி நட்புக்கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மைவிட்டு நீங்கும்படியாகப் புறங்கூறி நண்பரையும் பிரித்துவிடுவர்.
Parimelalagar
பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் - தம்மை விட்டு நீங்கும் ஆற்றல் புறங்கூறித் தம் கேளிரையும் பிரியப் பண்ணுவர்; நகச்சொல்லி நட்பு ஆடல் தேற்றாதவர் - கூடி மகிழுமாறு இனிய சொற்களைச் சொல்லி அயலாரோடு நட்பு ஆடலை அறியாதார்.
விளக்கம்:
(சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. கேளிரையும் பிரிப்பவர் என்ற கரு ததான், 'அயலாரோடும்' என்பது வருவித்துரைக்கப்பட்டது. 'அறிதல்' தமக்கு உறுதி என்று அறிதல். 'கடியுமிடந் தேற்றான் சோர்ந்தனன் கை" (கலித். மருதம்.27) என்புழிப் போலத் 'தேற்றாமை' தன்வினையாய் நின்றது. புறம் கூறுவார்க்கு யாவரும் பகையாவர் என்பது கருத்து.)
Manakkudavar
(இதன் பொருள்) நீங்கும்படி சொல்லித் தங் கேளிரானாரைப் பிரிப்பர்; மகிழச் சொல்லி நட்பாடலை உயர்வு பண்ண மாட்டாதார்,
(என்றவாறு). இது நட்டவரை யிழப்பர் என்றது.