குறள் 182

புறங்கூறாமை

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை

aranaleei allavai seithalin theethae
puranaleeip poiththu nakai


Shuddhananda Bharati

Against slander

Who bite behind, and before smile
Are worse than open traitors vile.


GU Pope

Not Backbiting

Than he who virtue scorns, and evil deeds performs, more vile,
Is he that slanders friend, then meets him with false smile.

To smile deceitfully (in another's presence) after having reviled him to his destruction (behind his back) is a greater evil than the commission of (every other) sin and the destruction of (every) virtue.


Mu. Varadarajan

அறத்தை அழித்துப்‌ பேசி அறமல்லாதவைகளைச்‌ செய்தலைவிட, ஒருவன்‌ இல்லாதவிடத்தில்‌ அவனைப்‌ பழித்துப்‌ பேசி நேரில்‌ பொய்யாக முகமலர்ந்து பேசுதல்‌ தீமையாகும்‌.


Parimelalagar

அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீது-அறன் என்பது ஒன்று இல்லை என அழித்துச் சொல்லி, அதன்மேல் பாவங்களைச் செய்தலினும் தீமையுடைத்து; புறன் அழீஇப் பொய்த்து நகை-ஒருவனைக் காணாதவழி இகழ்ந்துரையால் அழித்துச் சொல்லிக் கண்டவழி அவனோடு பொய்த்து நகுதல்.
விளக்கம்:
(உறழ்ச்சி, நிரல்நிறை வகையான் கொள்க. அழித்தல்-ஒளியைக் கோறல்.)


Manakkudavar

(இதன் பொருள்) அறத்தை யழித்து அறமல்லாதவற்றைச் செய்வதனினும் தீது, ஒருவனைக் காணாத விடத்து இழித்துரைத்துக் கண்டவிடத்துப் பொய் செய்து நகுதல்,
(என்றவாறு) இது பாவத்தினும் மிகப் பாவமென்றது.