குறள் 181

புறங்கூறாமை

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது

arangkooraan alla seyinum oruvan
purangkooraan yenral inithu


Shuddhananda Bharati

Against slander

Though a man from virtue strays,
To keep from slander brings him praise.


GU Pope

Not Backbiting

Though virtuous words his lips speak not, and all his deeds are ill.
If neighbour he defame not, there's good within him still.

Though one do not even speak of virtue and live in sin, it will be well if it be said of him "he does not backbite."


Mu. Varadarajan

ஒருவன்‌ அறத்தைப்‌ போற்றிக்‌ கூறாதவனாய்‌ அறமல்லாதவற்றைச்‌ செய்தாலும்‌ மற்றவனைப்‌ பற்றிப்‌ புறங்கூறாமல்‌ இருக்கிறான்‌ என்று சொல்லப்படுதல்‌ நல்லது.


Parimelalagar

ஒருவன் அறம் கூறான் அல்ல செயினும் - ஒருவன் அறன் என்று சொல்லுவதும் செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும்; புறம் கூறான் என்றால் இனிது-பிறனைப் புறம் கூறான் என்று உலகத்தாரால் சொல்லப்படுதல் நன்று.
விளக்கம்:
(புறம் கூறாமை அக்குற்றங்களான் இழிக்கப்படாது, மேற்பட்டுத் தோன்றும் என்பதாம். இதனான் அவ்வறத்தினது நன்மை கூறப்பட்டது.)


Manakkudavar

புறங்கூறாமையாவது யாவரையும் இகழ்ச்சியானவற்றைப் புறத் துரையாமை. (இதன் பொருள்) ஒருவன் அறத்தை வாயாற சொல்லுதலுஞ் செய்யானாய்ப் பாவஞ் செய்யினும், பிறரைப் புறஞ் சொல்லானென்று உலகத்தாரால் கூறப் படுதல் நன்றாம்,
(என்றவாறு) இது பாவஞ்செய்யினும் நன்மை பயக்கும் என்றது.