Kural 180
குறள் 180
இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு
iraleenum yennaathu vaekhkin viraleenum
vaentaamai yennunj serukku
Shuddhananda Bharati
Desireless, greatness conquers all;
Coveting misers ruined fall.
GU Pope
From thoughtless lust of other's goods springs fatal ill,
Greatness of soul that covets not shall triumph still.
To covet (the wealth of another) regardless of consequences will bring destruction. That greatness (of mind) which covets not will give victory.
Mu. Varadarajan
விளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.
Parimelalagar
எண்ணாது வெஃகின் இறல் ஈனும்-பின் விளைவது அறியாது ஒருவன் பிறன் பொருளை வெளவக் கருதின், அக்கருத்து அவனுக்கு இறுதியைப் பயக்கும்; வேண்டாமை என்னும் செருக்கு விறல் ஈனும்-அப்பொருளை வேண்டாமை என்னும் செல்வம் வெற்றியைப் பயக்கும்.
விளக்கம்:
(பகையும் பாவமும் பெருக்கலின் 'இறல் ஈனும்' என்றும், அப்பொருளை வேண்டிய உழல்வோர் யாவரையும் கீழ்ப்படுத்தலின், 'விறல் ஈனும்' என்றும் கூறினார். 'செருக்கு' ஆகுபெயர். இதனான் அவ்விருமையும் ஒருங்கு கூறப்பட்டன.)
Manakkudavar
(இதன் பொருள்) விசாரியாதே பிறர் பொருளை விரும்புவானாயின், அது கேட் டைத் தரும்; அதனை வேண்டாமையாகிய பெருமிதம் ஆக்கத்தைத் தரும், (எ-று) இஃது உயிர்க்குக் கேடு தருமென்றது.