குறள் 179

வெஃகாமை

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு

aranarindhthu vaekhkaa arivutaiyaarch saerum
thiranarindh thaangkae thiru


Shuddhananda Bharati

Against covetousness

Fortune seeks the just and wise
Who are free from coveting vice.


GU Pope

Not Coveting

Good fortune draws anigh in helpful time of need,
To him who, schooled in virtue, guards his soul from greed.

Lakshmi, knowing the manner (in which she may approach) will immediately come to those wise men who, knowing that it is virtue, covet not the property of others.


Mu. Varadarajan

அறம்‌ இஃது என்று அறிந்து பிறர்‌ பொருளை விரும்பாத அறிவுடையாரைத்‌ திருமகள்‌ தான்‌ சேரும்‌ திறன்‌ அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்‌.


Parimelalagar

அறன் அறிந்து வெஃகா அறிவுடையார் - இஃது அறன் என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரை; திரு திறன் அறிந்து ஆங்கே சேரும்-திருமகள் தான் அடைதற்கு ஆம் கூற்றினை அறிந்து அக் கூற்றானே சென்று அடையும்.
விளக்கம்:
(அடைதற்கு ஆம் கூறு: காலமும், இடனும், செவ்வியும் முதலாயின. இவை இரண்டு பாட்டானும் வெஃகாமையின் குணம் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) அறத்தை யறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தானே தகுதியறிந்து அப்போதே சேரும்,
(என்றவாறு). அறனறிதல் - விரும்பாமை யென்றறிதல். இது செல்வ முண்டாமென்றது.