குறள் 178

வெஃகாமை

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்

akhkaamai selvaththitrku yaathaenin vaekhkaamai
vaendum pirankaip porul


Shuddhananda Bharati

Against covetousness

The mark of lasting wealth is shown
By not coveting others' own.


GU Pope

Not Coveting

What saves prosperity from swift decline?
Absence of lust to make another's cherished riches thine!

If it is weighed, "what is the indestructibility of wealth," it is freedom from covetousness.


Mu. Varadarajan

ஒருவனுடைய செல்வத்திற்குக்‌ குறைவு நேராதிருக்க வழி எது என்றால்‌, அவன்‌ பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்‌.


Parimelalagar

செல்வத்திற்கு அஃகாமை யாதெனின்-சுருங்கல் மாலைத்தாகிய செல்வத்திற்குச் சுருங்காமைக் காரணம் யாது என்று ஒருவன் ஆராயின்; பிறர் வேண்டும் கைப்பொருள் வெஃகாமை-அது பிறன் வேண்டும் கைப்பொருளைத் தான் வேண்டாமையாம்
விளக்கம்:
('அஃகாமை' ஆகுபெயர். வெஃகாதான் செல்வம் அஃகாது என்பதாயிற்று.)


Manakkudavar

(இதன் பொருள்) செல்வஞ் சுருங்காமைக்குக் காரண மியாதோவெனின், பிறன் வேண்டுங் கைப்பொருளைத் தான் வேண்டாமை,
(என்றவாறு). இது செல்வ மழியாதென்றது.