Kural 18
குறள் 18
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
sirappodu poochanai sellaathu vaanam
varakkumael vaanorkkum eendu
Shuddhananda Bharati
The earth, beneath a barren sky,
Would offerings for the gods deny.
GU Pope
If heaven grow dry, with feast and offering never more,
Will men on earth the heavenly ones adore.
If the heaven dry up, neither yearly festivals, nor daily worship will be offered in this world, to the celestials.
Mu. Varadarajan
மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடக்கும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.
Parimelalagar
வானோர்க்கும் ஈண்டுச் சிறப்போடு பூசனை செல்லாது - தேவர்கட்கும் இவ்வுலகில் மக்களால் செய்யப்படும் விழவும் பூசையும் நடவாது; வானம் வறக்குமேல்-மழை பெய்யாதாயின.
விளக்கம்:
(நைமித்திகத்தோடு கூடிய நித்தியம் என்றார்ஆகலின் 'செல்லாது' என்றார். 'உம்மை' சிறப்பு உம்மை. நித்தியத்தில் தாழ்வு தீரச் செய்வது நைமித்திகம் ஆதலின், அதனை முற் கூறினார்.)
Manakkudavar
(இதன் பொருள்) சிறப்புச் செய்யப்படுகின்ற விழவு பூசனை நடவாது; வானம் புலருமாகில் தேவர்களுக்கும் இவ்வுலகின்கண்,
(என்றவாறு) மழை பெய்யாக்கால் வருங் குற்றங் கூறுவார் முற்பட நான்கு வகைப்பட்ட அறங்களில் பூசை கெடுமென்றார்.