குறள் 175

வெஃகாமை

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்

akhki akanra arivaennaam yaarmaatdum
vaekhki vaeriya seyin


Shuddhananda Bharati

Against covetousness

What is one's subtle wisdom worth
If it deals ill with all on earth.


GU Pope

Not Coveting

What gain, though lore refined of amplest reach he learn,
His acts towards all mankind if covetous desire to folly turn?

What is the advantage of extensive and accurate knowledge if a man through covetousness act senselessly towards all ?


Mu. Varadarajan

யாரிடத்திலும்‌ பொருளைக்‌ கவர விரும்பிப்‌ பொருந்தாதவற்றைச்‌ செய்தால்‌, நுட்பமானதாய்‌ விரிவுடையதாய்‌ வளர்ந்த அறிவால்‌ பயன்‌ என்ன?


Parimelalagar

அஃகி அகன்ற அறிவு என்னாம்-நுண்ணிதாய் எல்லா நூல்களினும் சென்ற தம் அறிவு என்ன பயத்ததாம்; வெஃகி யார் மாட்டும் வெறிய செயின்-பொருளை விரும்பி, யாவர் மாட்டும் அறிவோடு படாத செயல்களை அறிவுடையார் செய்வாராயின்.
விளக்கம்:
('யார்மாட்டும் வெறிய செய்த'லாவது, தக்கார் மாட்டும் தகாதார் மாட்டும், இழிந்தனவம், கடியனவும் முதலியன் செய்தல். அறிவிற்குப் பயன், அவை செய்யாமையாகலின் 'அறிவு என்னாம்' என்றார்.


Manakkudavar

(இதன் பொருள்) நுண்ணிதாகப் பரந்த அறிவுடையானாயினும் அதனாற் பயன் யாதாம்? எல்லார்மாட்டும் பொருளை விரும்பி யீரமில்லாதன செய்வானாயின், இஃது அறிவுடையார் செய்யாரென்றது.