Kural 173
குறள் 173
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்
sitrrinpam vaekhki aranalla seiyaarae
matrrinpam vaendu pavar
Shuddhananda Bharati
For spiritual bliss who long
For fleeting joy commit no wrong.
GU Pope
No deeds of ill, misled by base desire,
Do they, whose souls to other joys aspire.
Those who desire the higher pleasures (of heaven) will not act unjustly through desire of the trifling joy. (in this life.)
Mu. Varadarajan
அறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர், நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார்.
Parimelalagar
சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யார்-பிறர்பால் வெளவிய பொருளால் தாம் எய்தும் நிலையில்லாத இன்பத்தை விரும்பி, அவர் மாட்டு அறன் அல்லாத செயல்களைச் செய்யார்; மற்று இன்பம் வேண்டுபவர்-அறத்தான் வரும் நிலையுடைய இன்பத்தைக் காதலிப்பவர்.
விளக்கம்:
('பாவத்தான் வருதலின் அப்பொழுதே அழியும்' என்பார், 'சிற்றின்பம்' என்றார். 'மற்றையின்பம்' என்பது 'மற்றின்பம்' என நின்றது.)
Manakkudavar
(இதன் பொருள்) சிற்றின்பமாகிய பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் செய் யார்; பேரின்பமாகிய வீடுபேற்றைக் காமிப்பவர்,
(என்றவாறு). இது வீடுபெற வேண்டுவார் செய்யாரென்றது.