குறள் 170

அழுக்காறாமை

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்

alukkatrru akanraarum illai akhthuillaar
paerukkaththil theerndhthaarum il


Shuddhananda Bharati

Avoid envy

The envious prosper never
The envyless prosper ever.


GU Pope

Not Envying

No envious men to large and full felicity attain;
No men from envy free have failed a sure increase to gain.

Never have the envious become great; never have those who are free from envy been without greatness.


Mu. Varadarajan

பொறாமைப்பட்டுப்‌ பெருமையுற்றவரும்‌ உலகத்தில்‌ இல்லை; பொறாமை இல்லாதவராய்‌ மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும்‌ இல்லை.


Parimelalagar

அழுக்கற்று அகன்றாரும் இல்லை-அழுக்காற்றைச் செய்து பெரியராயினாரும் இல்லை; அஃது இல்லார் பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல்-அச் செயல் இலாதார் பெருக்கத்தின் நீங்கினாரும் இல்லை.
விளக்கம்:
(இவை இரண்டு பாட்டானும் கேடும் ஆக்கமும் வருவதற்கு ஏது ஒருங்கு கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) அழுக்காற்றைச் செய்து பெரியராயினாரும் இல்லை ; அச் செயலிலாதார் பெருக்கத்தி னீங்கினாரு மில்லை,
(என்றவாறு)