Kural 168
குறள் 168
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்
alukkaaru yenaoru paavi thiruchsetrruth
theeyuli uiththu vidum
Shuddhananda Bharati
Caitiff envy despoils wealth
And drags one into evil path.
GU Pope
Envy, embodied ill, incomparable bane,
Good fortune slays, and soul consigns to fiery pain.
Envy will destroy (a man's) wealth (in his world) and drive him into the pit of fire (in the world to come.)
Mu. Varadarajan
பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தையும் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்திவிடும்.
Parimelalagar
அழுக்காறு என ஒரு பாவி-அழுக்காறு என்று சொல்லபட்ட ஒப்பில்லாத பாவி; திருச்செற்றுத் தீயுழி உய்த்துவிடும்-தன்னை உடையானை இம்மைக்கண் செல்வத்தைக் கெடுத்து, மறுமைக்கண் நரகத்தில் செலுத்திவிடும்.
விளக்கம்:
(பண்பிற்குப் பண்பி இல்லையேனும், தன்னை ஆக்கினானை இருமையுங் கெடுத்தாற் கொடுமை பற்றி, அழுக்காற்றினைப் 'பாவி' என்றார், கொடியானைப் 'பாவி' என்னும் வழக்கு உண்மையின். இவை ஆறு பாட்டானும் அழுக்காறு உடைமையது குற்றம் கூறப்பட்டது.
Manakkudavar
(இதன் பொருள்) அழுக்காறென்று சொல்லப்படுகின்ற வொருபாவி செல்வத்தை யுங் கெடுத்துத் தீக்கதியுள்ளுங் கொண்டு செலுத்திவிடும்,
(என்றவாறு). ஒரு பாவி - நிகரில்லாத பாவி. இது செல்வங் கெடுத்தலே யன்றி நரகமும் புகுவிக்கு மென்றது.