குறள் 166

அழுக்காறாமை

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்

koduppathu alukkaruppaan sutrram uduppathooum
unpathooum inrik kedum


Shuddhananda Bharati

Avoid envy

Who envies gifts shall suffer ruin
Without food and clothes with his kin.


GU Pope

Not Envying

Who scans good gifts to others given with envious eye,
His kin, with none to clothe or feed them, surely die.

He who is envious at a gift (made to another) will with his relations utterly perish destitute of food and rainment.


Mu. Varadarajan

பிறர்க்கு உதவியாகக்‌ கொடுக்கப்படும்‌ பொருளைக்‌ கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம்‌, உடையும்‌ உணவும்‌ இல்லாமல்‌ கெடும்‌.


Parimelalagar

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம்-ஒருவன் பிறர்க்கு கொடுப்பதன்கண் அழுக்காற்றைச் செய்வானது சுற்றம்; உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும்-உடுக்கப்படுவதும் உண்ணப்படுவதும் இன்றிக் கெடும்.
விளக்கம்:
(கொடுப்பதன்கண் அழுக்கறுத்தலாவது, கொடுக்கப்படும் பொருள்களைப் பற்றிப் பொறாமை செய்தல், 'சுற்றம் கெடும்' எனவே அவன் கேடு சொல்லாமையே பெறப்பட்டது. பிறர் பேறு பொறாமை தன் பேற்றையே அன்றித் தன் சுற்றத்தின் பேற்றையும் இழப்பிக்கும் என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) பிறனொருவன் மற்றொருவனுக்குக் கொடுப்பதனை அழுக்காற் றினாலே விலக்குமவனது சுற்றம் உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும், (எ-று.) இது நல்குரவு தருமென்றது.