குறள் 165

அழுக்காறாமை

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது

alukkaaru utaiyaarkku athusaalum onnaar
valukkiyum kaeteen pathu


Shuddhananda Bharati

Avoid envy

Man shall be wrecked by envy's whim
Even if enemies spare him.


GU Pope

Not Envying

Envy they have within! Enough to seat their fate!
Though foemen fail, envy can ruin consummate.

To those who cherish envy that is enough. Though free from enemies that (envy) will bring destruction.


Mu. Varadarajan

பொறாமை உடையவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும்‌, பகைவர்‌ தீங்குசெய்யத்‌ தவறினாலும்‌ தவறாமல்‌ கேட்டைத்‌ தருவது அது.


Parimelalagar

ஒன்னார் வழுக்கியும் கேடு ஈன்பது-அழுக்காறு பகைவரை யொழிந்தும் கேடு பயப்பதொன்று ஆகலின், அழுக்காறு உடையார்க்கு அது சாலும்-அவ்வழுக்காறு உடையார்க்குப் பகைவர் வேண்டா; கேடு பயப்பதற்கு அதுதானே அமையும்.
விளக்கம்:
('அதுவே' என்னும் பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது.)


Manakkudavar

(இதன் பொருள்) அழுக்காறுடையார்க்கு அவ்வழுக்காறு தானே அமையும்; பகை வர் கேடுபயத்தால் தப்பியும் கெடுப்பதற்கு,
(என்றவாறு). இஃது உயிர்க்குக் கேடுவரு மென்று கூறிற்று.