குறள் 162

அழுக்காறாமை

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்

viluppaetrrin akhthoppathu illaiyaar maatdum
alukkaatrrin anmai paerin


Shuddhananda Bharati

Avoid envy

No excellence excels the one
That by nature envies none.


GU Pope

Not Envying

If man can learn to envy none on earth,
'Tis richest gift, -beyond compare its worth.

Amongst all attainable excellences there is none equal to that of being free from envy towords others.


Mu. Varadarajan

யாரிடத்திலும்‌ பொறாமை இல்லாதிருக்கப்‌ பெற்றால்‌, ஒருவன்‌ பெறத்தக்க மேம்பாடான பேறுகளில்‌ அதற்கு ஒப்பானது வேறொன்றும்‌ இல்லை.


Parimelalagar

யார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின்-யாவர் மாட்டும் அழுக்காற்றினின்று நீங்குதலை ஒருவன் பெறுமாயின்; விழுப்பேற்றின் அஃது ஒப்பது இல்லை-மற்று அவன் பெறும் சீரிய பேறுகளுள் அப்பேற்றினை ஒப்பது இல்லை.
விளக்கம்:
(அழுக்காறு பகைவர் மாட்டும் ஒழிதற்பாற்று என்பார், 'யார் மாட்டும்' என்றார். அன்மை-வேறாதல். இவை இரண்டு பாட்டானும் அழுக்காறு இன்மையது குணம் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) விழுமிய பேறுகளுள், யார்மாட்டும் அழுக்காறு செய்யாமையைப் பெறுவனாயின், அப்பெற்றியினை யொப்பது பிறிதில்லை,
(என்றவாறு). இஃது அழுக்காறு செய்யாமை யெல்லா நன்மையினும் மிக்கதென்றது.