குறள் 161

அழுக்காறாமை

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு

olukkaaraak kolka oruvanthan naenjchaththu
alukkaaru ilaatha iyalpu


Shuddhananda Bharati

Avoid envy

Deem your heart as virtuous
When your nature is not jealous.


GU Pope

Not Envying

As 'strict decorum's' laws, that all men bind,
Let each regard unenvying grace of mind.

Let a man esteem that disposition which is free from envy in the same manner as propriety of conduct.


Mu. Varadarajan

ஒருவன்‌ தன்‌ நெஞ்சில்‌ பொறாமை இல்லாமல்‌ வாழும்‌ இயல்பைத்‌ தனக்கு உரிய ஒழுக்கநெறியாகக்‌ கொண்டு போற்ற வேண்டும்‌.


Parimelalagar

ஒருவன் தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு-ஒருவன் தன் நெஞ்சத்தின்கண் அழுக்காறு என்னும் குற்றம் இல்லாத இயல்பினை; ஒழுக்காறாக கொள்க-தனக்கு ஓதிய ஒழுக்க நெறியாகக் கொள்க.
விளக்கம்:
(இயல்பு-அறிவோடு கூடிய தன்மை. அத்தன்மையும் நன்மை பயத்தலின், ஒழுக்க நெறி போல உயிரினும் ஓம்புக என்பதாம்.)


Manakkudavar

அழுக்காறாமையாவது பிறராக்க முதலாயின் கண்டு பொறாமையால் வரும் கின்ற மனக்கோட்டத்தைச் செய்யாமை. (இதன் பொருள்) ஒருவன் தன்னெஞ்சத்து அழுக்காறு இல்லாதவியல்பைத், தனக்கு ஒழுக்க நெறியாகக் கொள்க,
(என்றவாறு). இஃது அழுக்காறு தவிர வேண்டு மென்றது.