குறள் 160

பொறையுடைமை

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்

unnaathu notrpaar paeriyar pirarsollum
innaachsol notrpaarin pin


Shuddhananda Bharati

Forgiveness

Who fast are great to do penance
Greater are they who bear offence.


GU Pope

The Possession of Patience, Forbearance

Though 'great' we deem the men that fast and suffer pain,
Who others' bitter words endure, the foremost place obtain.

Those who endure abstinence from food are great, next to those who endure the uncourteous speech of others.


Mu. Varadarajan

உணவு உண்ணாமல்‌ நோன்பு கிடப்பவர்‌, பிறர்‌ சொல்லும்‌ கொடுஞ்‌ சொற்களைப்‌ பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான்‌ பெரியவர்‌ ஆவர்‌.


Parimelalagar

உண்ணாது நோற்பார் பெரியர்-விரதங்களான் ஊனைத் தவிர்த்து உற்ற நோயைப் பொறுப்பார் எல்லாரினும் பெரியர்; பிறர் சொல்லும் இன்னாச் சொல் நோற்பாரின் பின்-அவர் பெரியராவது, தம்மைப் பிறர் சொல்லும் இன்னாச் சொல்லைப் பொறுப்பாரின் பின்.
விளக்கம்:
(பிறர்-அறிவிலாதார். நோலாமைக்கு ஏதுஆகிய இருவகைப் பற்றொடு நின்றே நோற்றலின், 'இன்னாச் சொல் நோற்பாரின் பின்' என்றார். இவை இரண்டு பாட்டானும் பிறர் மிகைக்கச் சொல்லியன பொறுத்தல் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) உண்ணாது பொறுப்பார் எல்லாரினும் பெரியர்; அவர் பெரியா ராவது பிறர் சொல்லுங் கடுஞ்சொல்லைப் பொறுப்பாரின் பின்,
(என்றவாறு). இது தவம் பண்ணுவாரினும் பெரியரென்றது.