Kural 159
குறள் 159
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்
thurandhthaarin thooimai utaiyar irandhthaarvaai
innaachsol notrkitr pavar
Shuddhananda Bharati
More than ascetics they are pure
Who bitter tongues meekly endure.
GU Pope
The Possession of Patience, Forbearance
They who transgressors' evil words endure
With patience, are as stern ascetics pure.
Those who bear with the uncourteous speech of the insolent are as pure as the ascetics.
Mu. Varadarajan
வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ் சொற்களைப் பொறுத்துக் கொள்பவர் துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.
Parimelalagar
துறந்தாரின் தூய்மை உடையர் - இல்வாழ்க்கைக்கண் நின்றேயும் துறந்தார் போலத் தூய்மையுடையார்; இறந்தார் வாய் இன்னாச் சொல் நோற்சிற்பவர்-நெறியைக் கடந்தார வாய் இன்னாச் சொல்லைப் பொறுப்பவர்.
விளக்கம்:
(தூய்மை: மனம் மாசு இன்மை. 'வாய்' என வேண்டாது கூறினார், 'தீய சொற்கள் பயின்றது' எனத் தாம் வேண்டிய தன் இழிபு முடித்தற்கு.)
Manakkudavar
(இதன் பொருள்) மிகையாய்ச் சொல்லுவாரது தீச்சொல்லைப் பொறுக்குமவர் , துறந்தவர்களைப் போலத் தூய்மை யுடையார்,
(என்றவாறு). இது பற்றறத் துறந்தவரோ டொப்பரென்றது.